வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதிக்கு அரிசி கொம்பனை திரும்ப கொண்டு வர வலியுறுத்தி செண்பகதொழு குடியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.
சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் உயிர் பலி உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் ஏப்.29ல் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.
அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை மே 27ல் கம்பம் நகரில் ஆக்ரோஷத்துடன் வலம் வந்தது. எதிரே வந்த முதியவரை தள்ளியதில் அவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து குமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் கொண்டு விட்டனர்.
![]()
|
யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயல் தொடர்ந்தால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.