புதுச்சேரி: ஐ.ஆர்.சி.டி.சி., பாரத் சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ரவிக்குமார் கூறினார்.

புதுச்சேரியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., பல சிறப்பு ரயில், கல்வி சுற்றுலா, பயண திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதனை ஏற்று சென்னை, திருச்சியில் விமானம் மூலம் சிறப்பு யாத்திரை பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.டி.சி., சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத கவுரோ சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 3 குளிர்சாதன பெட்டி, 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பான்ட்ரி கார், இரண்டு பவர்கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளது.
பாரத் கவுரோ சுற்றுலா ரயில் தென்னக ரயில்வே சார்பில் வைஷ்ணவ்தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. 11 நாட்கள், 12 இரவுகள் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐதராபாத், ஆக்ரா, மதுரா வைஷ்ணவிதேவி, அமிர்தசரஸ், புதுடில்லி வரை செல்கிறது. ஒரு நபருக்கு ஸ்லீப்பர் வகுப்பறையில் ரூ.25,350, ஏசி பெட்டியில் ரூ.40,350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.