கோவை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பரான, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் நிறுவன, 'பில்' தொகையை நிறுத்தி வைக்க, நெடுஞ்சாலைத்துறைக்கு, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கோவையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்.பெரிய குயிலி என்ற இடத்தில் பிரத்யேகமாக, 'பிளான்ட்' அமைத்து பணி செய்கிறார். காளப்பட்டியில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இங்கிருந்து, அரசு துறை 'டெண்டர்'களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
![]()
|
சமீபத்தில், சங்கர் ஆனந்த் அலுவலகங்களில் சோதனை நடத்திய, வருமான வரித்துறையினர், சங்கர் ஆனந்த் நிறுவனங்கள் செய்து வரும் ஒப்பந்த பணிகளுக்கான பில் தொகையை நிறுத்தி வைத்து, அதைப் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டுமென, தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.