எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல்.,ஐ காப்பாற்ற முடிவு
எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல்.,ஐ காப்பாற்ற முடிவு

எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல்.,ஐ காப்பாற்ற முடிவு

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான, எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் ஊழியர்களையும் செயல்பாடுகளையும், மற்றொரு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து ஒன்றாக்கும் முயற்சிகள் குறித்து வெகுகாலமாகவே பேசப்பட்டு
Centre may shut down debt-laden MTNL: Reportஎம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல்.,ஐ காப்பாற்ற முடிவு

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான, எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் ஊழியர்களையும் செயல்பாடுகளையும், மற்றொரு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து ஒன்றாக்கும் முயற்சிகள் குறித்து வெகுகாலமாகவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை மட்டும் நிர்வகிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.டி.என்.எல்., நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. இதற்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இதை மீட்டு, லாபப் பாதைக்கு திருப்புவது என்பது சாத்தியமே இல்லாதது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தை பி.எஸ்.என்.எல்., உடன் இணைத்தால், அந்நிறுவனமும் சரிந்துவிடும் அபாயம் உள்ளது. இரு நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதால், இரு நிறுவனங்களுமே மீட்சியடையாமல் வீழ்ச்சியை சந்திக்கும்.


இந்த காரணத்தால், அரசு எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் ஊழியர்களையும் செயல்பாட்டையும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், எம்.எடி.என்.எல்., நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து வெளியே எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை பட்டியலிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


பி.எஸ்.என்.எல்., ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையில் செயல்பாடுகளை துவக்கி உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிதி நிலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்குள், 5ஜி சேவையையும் வழங்க திட்டமிட்டு வருகிறது. எனவே இந்நிறுவனம் மட்டும் கவனம் செலுத்த அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (17)

Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
07-ஜூன்-202322:38:31 IST Report Abuse
Jaykumar Dharmarajan மத்திய அரசின் எந்த துறையில் பணியாளர்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி, குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட மணிக்கணக்கின்படி, லஞ்சம் வாங்காமல், உடனுக்குடன் ஃபைலகளை க்ளீயர் செய்யாமல் பணி புரிந்தார்கள்? ஏன் அரசுப் பணியில் இருக்கும் மணமகன்/மணமகள் திருமணத்திற்கு இத்தனை டிமாண்ட்? சேருவது மட்டுமே கஷ்டம், சேர்ந்துவிட்டால் அப்புறம் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. பெரும்பாலான மத்திய அரசு சேவை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி மூடப் படும் நிலை வந்த உடன் தான், அதே வேலையை சிறிதும் தரம் குறையாமல் செய்யக் கூடிய தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் வந்தது. அப்படித் தொடங்கப் பட்ட நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு சேவை அளித்துக் கொண்டு வருகிறது. அப்படி மத்திய அரசில் பணிபுரிந்து சுகம் கண்ட அலுவலர்கள் தான் இப்போது தனியாரிடம் பணிசெய்ய நேரும் போது மத்திய அரசு அனைத்து பொது நிறுவனங்களையும் தனியாரிடம் விற்றுவிட்டது என்று அங்கலாய்க்கிறார்கள்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
07-ஜூன்-202317:25:47 IST Report Abuse
GMM MTNL மூடி விடலாம். மாநகர் சில வற்றில் மட்டும் இருக்கும். BSNL போதும். தனியார் தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. BSNL யை நடத்த அனைத்து அரசு துறைகள், அதிகாரிகள், அரசு துறைகள், அரசு நிதி பெறும் எல்லா நிறுவனங்கள், வரி விலக்கு பெறும் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்.... bsnl மொபைல் sim கட்டாயம் பயன்படுத்த வேண்டும். Bsnl ஈமெயில் சேவை துவங்க வேண்டும். அதனை மேற்கூறிய வை பயன்படுத்த வேண்டும். புதிய தொழில் நுட்பம் என்பதால் போட்டி தேர்வு மட்டும். இட ஒதுக்கீடு கூடாது. Recharge 100, 500, 1000... என்று இருக்க வேண்டும். Call, sms, data உபயோகம் பொறுத்து பணம் பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
07-ஜூன்-202314:42:52 IST Report Abuse
K.n. Dhasarathan b.s.n.l. நிறுவனத்தை மத்திய அரசுதான் கொன்று விட்டதே பிறகு எப்படி m.t.m.l. நிறுவனத்தை சேர்க்க முடியும். திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை, அதனால்தான் ரெலியான்ஸ் நிறுவனம் வளர்க்கப்பட்டு 5G, 6G என்று பிரதமரே தொடக்கி வைத்து, இன்னும் B.S.N.L. லில் 4G ஏ வரவில்லை விரைவில் இரண்டு நிறுவனங்களையும் மூடு விழா நடத்த வருகிற திட்டம் தான்.
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
07-ஜூன்-202319:41:01 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்பிஎஸ்என்எல் நிறுவனம், மொபைல் சேவை வழங்க தயாராக இருந்த பொது, அதை நிறுத்தி வைத்து, ஏர்டெல் நிறுவனம் வளர உதவினார்கள். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். 2009- க்கு பிறகு மொபைல் சேவை தான் வளர்ந்தது. அதன் பிறகு பிஎஸ்என்எல் நட்டத்தில் விழுந்தது. இழப்பை ஈடு கட்ட காங்கிரஸ்-பாஜக ஆட்சிகளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கொடுத்தாகிவிட்டது. மேலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேல பார்க்கும் திறன் நாடே அறிந்த ஒன்று. இதுபோன்ற நிறுவனங்களை மூடுவது தான் சிறந்தது. மக்கள் வரிப்பணத்தை தொடர்ந்து கொடுக்க முடியாது....
Rate this:
08-ஜூன்-202308:51:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்தசரதன் ஒரு டீம்கா அடிமை ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X