காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா 74. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஏஜென்ட் ஆக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர். வெளி நாடுகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகமது அலி ஜின்னாவின் உறவினர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.