வாஷிங்டன்: டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா வந்த விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
பயணிகள் தங்கள் பாதையில் செல்வதற்கு வேண்டிய ஒரு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர். அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. இது குறித்த மேலும் எதுவும் பேச நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.