"விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசு": அண்ணாமலை குற்றச்சாட்டு
"விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசு": அண்ணாமலை குற்றச்சாட்டு

"விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசு": அண்ணாமலை குற்றச்சாட்டு

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: 150 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளை, தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் பின்னால் ஒளிந்து கொண்டு, போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம்
 DMK government neglecting farmers: Annamalai allegation  "விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசு": அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 150 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளை, தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் பின்னால் ஒளிந்து கொண்டு, போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து, 150 நாள்களாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழக தொழிற்துறை அமைச்சர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவித்ததில் இருந்தே, விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுக்காததால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


கடந்த சில நாள்களுக்கு முன்பாக, விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாகவும், அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி அன்னையா உயிரிழந்திருக்கிறார் என்பதும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.


150 நாள்களாகப் போராடி வரும் விவசாயிகளை, தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் பின்னால் ஒளிந்து கொண்டு, போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு.


உடனடியாக, அமைச்சர் நேரில் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்து, அவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (13)

Harikrishnan - Coimbatore ,இந்தியா
09-ஜூன்-202308:24:19 IST Report Abuse
Harikrishnan அன்னூர் பகுதியில் அமைய உள்ள TIDCO தொழில் பேட்டை ஒரு மிக பெரிய land mafia கையில் உள்ளது.... விரைவில் மிக பெரிய ஊழலை நிகழந்த உள்ளார்கள்.... விவசாயிகள் ஏமாளிகள்.
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
08-ஜூன்-202300:46:10 IST Report Abuse
Ram உங்க கட்சி (பிஜேபி) விவசாயிகளுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறக்கமுடியாது, அண்ணாமலை
Rate this:
Cancel
sakthi -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202315:42:11 IST Report Abuse
sakthi வீராங்கனைகள் போராட்டம் ஏன் பிரதமர் மோடி தலையிட இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X