சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று(ஜூன் 07) விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது.