வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் தெருக்களில் திரண்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த மோதல் மூன்று இளைஞர்கள் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஏற்பட்டுள்ளது. இதை பதிவிட்டது சிறுவர்கள் சிறார்கள் என்று கூறப்படுகிறது. மக்கள் வீதிகளில் ஒன்று கூட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே கோலாப்பூரில் தடையை மீறி பேரணி சென்ற இந்து அமைப்பினரை, போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் நடந்தது.

இது குறித்து, மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டி: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. அமைதி காக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.