தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 07) கனமழைக்கு வாய்ப்புள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 07) கனமழைக்கு வாய்ப்புள்ளது.




latest tamil news


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(ஜூன் 07) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.



latest tamil news

நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் நாளை(ஜூன் 08) அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X