வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மணிப்பூரில் சமூகங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக வன்முறை நடந்தது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள மெய்டி சமூகத்தினருக்கும், 40 சதவீதம் உள்ள நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மணிப்பூரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்பு படை வீரருக்கு நடந்த மோதலில், ஒரு பிஎஸ்எப் வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும், இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து,மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மணிப்பூரில் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடு காரணமாக வன்முறை நடந்தது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த பிரச்னைக்கு, தீர்வு காண உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார். மேலும் மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித் ஷா 4 நாட்கள் அங்கு தங்கி இருந்தார். அப்போது பல கலவரக்கார்கள் சரண் அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.