மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை வீரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி.,யுமான
Wrestlers strike temporarily halted  
மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை வீரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி வீரர்கள் நடத்தும் போராட்டத்தையடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஆறரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றப்பட அவகாசம் கொடுக்கும் வகையில் ஜூன் 15ம் தேதி வரை தங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக வீராங்கனைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கோரிக்கைகள்:

1. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

2. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.

3. மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

4. ஏப்ரல் 28ம் தேதி, டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கை மீறியதாகக் கூறி தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

5. பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும்.


ஜூன்.,30ல் மல்யுத்த சம்மேளன தேர்தல்



அனுராக் தாக்கூர் கூறியதாவது:

மல்யுத்த வீரர்களுடன், ஆறு மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ஜூன்.,30க்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

ஜூன்.,15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.


ஜூன்.,15க்குள் விசாரணை முடியும்



மல்யுத்த வீரர்கள் கூறியதாவது:

15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் மீதான, போலீஸ் விசாரணை முடியும் என, அரசு உறுதியளித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி, பேரணி நடத்த முயன்றதில் கைதானபோது, மல்யுத்த வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.,களையும் அரசு திரும்ப பெற வேண்டும் என, முன்வைத்த கோரிக்கையை, அமைச்சர் ஏற்றுள்ளார்,

மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பு பற்றி, நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார். எங்களது போராட்டம் ஓயவில்லை, ஜூன்.,15க்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் மீண்டும் தொடரும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (10)

nv -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202306:46:06 IST Report Abuse
nv இது ஒரு பாஸ் ஐ பழி வாங்கும் போராட்டம் என்று தெளிவாக தெரிகிறது. இப்படியே போனால் இவர்கள் குடும்பத்தை தவிர வேறு எவருக்கும் மெடல் கொடுக்க கூடாது என்று கேட்டாலும் ஆச்சர்யம் இல்லை!
Rate this:
Cancel
07-ஜூன்-202323:03:49 IST Report Abuse
அருண், சென்னை யாரும் ஆணியே புடுங்க வேண்டாம்... இந்தியாவிற்கு குத்துச்சண்டையே வேணாம்... விளையாட்டை விட இவங்க பஞ்சாயதே பெருசா இருக்கு
Rate this:
Cancel
GANESUN - Chennai,இந்தியா
07-ஜூன்-202321:04:30 IST Report Abuse
GANESUN ஹரியானாவின் ஏகாதிபத்தியத்தை உடைத்து இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வீரர்கள் வர ஆரம்பித்ததுதான் காரணம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X