வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உபி.யில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தாதாவை, மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.,யைச் சேர்ந்த பிரபல தாதா சஞ்சிவ்ஜீவா, இவர் மீது பல்வேறு பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இன்று (07 ம் தேதி) கொலை வழக்கு ஒன்றில லக்னோ கீழமை நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜரானார். அப்போது மர்ம நபர் சஞ்சீவ் ஜீவா மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவ் ஜீவா உயிரிழந்தார்.
![]()
|
லக்னோ காவல் துணை கண்காணி்ப்பாளர் ராகுல் கூறியது, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவன் வழக்கறிஞர் போல வேடமணிந்து வந்துள்ளான். இச்சம்பவத்தில் இரு போலீஸ்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என்றார்.
இதற்கிடையே உ.பி.யைச் சே்ர்ந்த மற்றொரு தாதாவும் அரசியல் பிரமுகருமான முக்தார் அன்சாரி என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.