வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா : லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியகியுள்ளது.
லோக்சபாவுக்கு அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
![]()
|
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா, சந்திரசேகர ராவ் ஈடுபட்டிருந்தாலும், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க அவர்கள் விரும்பவில்லை. இதனால், கூட்டணி அமைக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வரும் 12ம் தேதி பாட்னாவில், முக்கிய கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது. திடீரென 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங் கூறியது, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23ல் பாட்னா நகரில் நடக்கிறது .இதில் பங்கேற்க கட்சி தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார்.