வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, இன்று (07 ம் தேதி) முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்துபேசினார்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி பாட்னாவில் நடைபெறும் என இன்று ஜக்கிய ஜனதா தள கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று (07 ம் தேதி) காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்று , அம்மாநில பிரதான கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும்,முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது , முன்னாள் முதல்வர் குமாரசாமி உடனிருந்தார்.
![]()
|
பா.ஜ., கூட்டணி
முன்னதாக ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், கட்சியும், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் 2024-லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பரூக் அப்துல்லாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.