திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், 2007ல் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், சரியான திட்டமிடல் இல்லாததால் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீர், குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை குறித்து பலமுறை புகார் அளித்தும், பேரூராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, 'பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.