வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இம்மாத இறுதியில் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் இதுவரை எகிப்து நாட்டிற்கு சென்றதில்லை. ஆனால் இந்தாண்டு ஜனவரியில் நடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு எகிப்து அதிபர்அப்தெல் பதா அல் சிசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, எகிப்து நாட்டிற்கும் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா அல் சிசியை சந்தித்து இரு நாடுகளிடையே பரஸ்பரம், நட்புறவு, முதலீடு, வர்த்தகம் , ராணுவம் பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்கிறார்.