உணவுடன் ரஷ்யாவுக்கு பறந்த ஏர் - இந்தியா மாற்று விமானம்
உணவுடன் ரஷ்யாவுக்கு பறந்த ஏர் - இந்தியா மாற்று விமானம்

உணவுடன் ரஷ்யாவுக்கு பறந்த ஏர் - இந்தியா மாற்று விமானம்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை: இன்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் - இந்தியா விமானத்திற்கு மாற்றாக, அந்நிறுவனத்தின் மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.தலைநகர் புதுடில்லியில் இருந்து, கடந்த 6ம் தேதி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.விமானம் நடுவானில் பறந்த போது, இன்ஜினில் கோளாறு
 Air-India replacement flight to Russia with food  உணவுடன் ரஷ்யாவுக்கு பறந்த ஏர் - இந்தியா மாற்று விமானம்

மும்பை: இன்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் - இந்தியா விமானத்திற்கு மாற்றாக, அந்நிறுவனத்தின் மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.


தலைநகர் புதுடில்லியில் இருந்து, கடந்த 6ம் தேதி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.


விமானம் நடுவானில் பறந்த போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகருக்கு ஏர் - இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது.


latest tamil news


இந்த விமானத்தில், 216 பயணியர், 16 விமான ஊழியர்கள் என, மொத்தம் 232 பேர் இருந்தனர். மகடானில் தங்க வைக்கப்பட்ட பயணியருக்கு, உணவு, படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், குழந்தைகள், முதியோர் கடும் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், மகடானில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணியர் மற்றும் விமான ஊழியர்களை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு, மீண்டும் அழைத்துச் செல்ல, மும்பையில் இருந்து, ஏர் - இந்தியாவின் மாற்று விமானம் நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. மேலும், பயணியருக்கான உணவையும், தேவையான மற்ற பொருட்களையும் அந்த விமானம் ஏற்றிச் சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

08-ஜூன்-202306:19:52 IST Report Abuse
Santhosh Kumar ரஷ்யாவை நட்பு நாடுன்னு சொன்னவர்களாம் வர சொல்லுங்க... இதற்கு தான் ரஷ்யாவை நம்ப வேண்டாம்னு சொல்றது... ஒரு நட்பு நாட்டின் மக்களை இப்படியா treat பண்றது.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-ஜூன்-202310:53:11 IST Report Abuse
Barakat Aliஅறிவாளி சார் .... உலகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் சராசரி பயணிகள் அளவீடு (நேரத்தைப் பொறுத்து ஒரு மணிநேரத்துக்கு இவ்வளவு, வந்து செல்லும் விமானங்களின் அளவு இப்படியெல்லாம்) உண்டு .... அதை மீறினால் பிரச்னைதான் .... பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் ......
Rate this:
Cancel
08-ஜூன்-202304:28:24 IST Report Abuse
குமரி குருவி கடமை கண் போன்றது
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
08-ஜூன்-202300:54:49 IST Report Abuse
morlot It is better to avoid flying with air india.Always there is a problem with air india.At France even the indian travel agents advice the passengers to travel with air India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X