உணவு பாதுகாப்பு தொடர்பான ஐந்தாவது தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், கேரளா, பஞ்சாபுக்கு அடுத்ததாக தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த மாவட்டங்களுக்கான பட்டியலில், கோவை முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
![]()
|
ஐந்து அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு,
இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதன்படி, கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழகம், மூன்றாவது இடத்தில் உள்ளது. மாவட்டங்களுக்கான தரப் பட்டியலில், 231 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 31 மாவட்டங்கள், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, பெரம்பலுார், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலுார் ஆகியவையும், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.
பட்டியலை வெளியிட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:![]()
|
உணவுப் பழக்கம், வாழ்க்கை நடைமுறை, அந்தந்த பருவத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி
ஆகியவற்றில், நம் பாரம்பரிய முறைகளை பின்பற்றினாலேயே, உலகின் சிறந்த உணவு தரத்தை இந்தியா பெற முடியும்.
நல்ல தரமான ஊட்டச்சத்துள்ள உணவுகளே, நோய்களில் இருந்து நம்மை காக்கும். உணவு பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -