வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம், பெங்களூரில் நேற்று(ஜூன் 7) எளிமையான முறையில் நடந்தது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மகள் வாங்மயி, ப்ரதீக் இருவருக்கும், பெங்களூரின் தனியார் ஹோட்டலில் நேற்று- எளிமையான முறையில் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடத்தப்படும்.
![]()
|
ஆனால், மத்திய அரசில் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் நிர்மலா சீதாராமன், இந்த திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார். உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி, கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.