திண்டிவனம் : திண்டிவனத்தில் ஸ்ரீகுமரன் ஆர்த்தோ மருத்துவமனையை, முன்னாள் அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.
திண்டிவனம் செஞ்சி ரோடு அருகிலுள்ள மொட்டையர் தெருவில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ குமரன் ஆர்த்தோ மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
பெட்ரோல் பங்க் டீலர் லயன் மணி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். டாக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்த்தோ டாக்டர் குமரன் வரவேற்றார். ஸ்ரீ குமரன் ஆர்த்தோ மருத்துவமனையை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.
இதில் சாரதா, சுஜாதா, பானுமதி, டாக்டர்கள் ஷோபனா, சண்மதி, சஞ்சீவ் மற்றும் திண்டிவனத்தில் உள்ள மருத்துவர்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், லயன்ஸ் நண்பர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.