மதுரை-குருவித்துறை அருகே வைகையாற்றை ஆக்கிரமித்து சிலர் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.
குருவித்துறை சிற்றணை பகுதியில் ஆற்றின் இருபுறமும் விவசாய ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது.ஆற்றின் கரையை ஒட்டி பட்டா நிலத்துடன் சேர்த்து விவசாயம் செய்கின்றனர். தவிர ஆற்றுக்குள் தண்ணீர் வராத போது தென்னங்கன்றுகளை நட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பகுதிகளிலும் கரையோரத்தை ஆக்கிரமித்து வாழை, தென்னை மரங்களை வளர்க்கின்றனர்.
நகருக்குள் கழிவுநீரால் வைகை மாசுபடுகிறது என்றால் கிராமப்புறங்களில் ஆறு அத்துமீறி ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிகிறது. இருக்கும் ஒற்றை ஆற்றை நீர்வளத்துறையினர் முறையாக பராமரித்து, ஆற்றின் அகலத்தை அளவிட்டு கரையோடு, ஆற்றையும் பாதுகாக்க வேண்டும்.