மதுரையில் சந்திப்பு பகுதியில் 'ரவுண்டானா' அமைக்க திட்டம்
மதுரையில் சந்திப்பு பகுதியில் 'ரவுண்டானா' அமைக்க திட்டம்

மதுரையில் சந்திப்பு பகுதியில் 'ரவுண்டானா' அமைக்க திட்டம்

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
மதுரை-மதுரை நகரை அழகுபடுத்தும் வகையில் ரோடு சந்திப்பு பகுதிகளில் சிக்னல்களை அகற்றி, ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.தொன்மையான மதுரை நகரின் ரோடுகள் வாகன பெருக்கத்தால் குறுகிவிட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சந்திப்புகளில் சிக்னல்களுக்காக நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி



மதுரை-மதுரை நகரை அழகுபடுத்தும் வகையில் ரோடு சந்திப்பு பகுதிகளில் சிக்னல்களை அகற்றி, ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

தொன்மையான மதுரை நகரின் ரோடுகள் வாகன பெருக்கத்தால் குறுகிவிட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சந்திப்புகளில் சிக்னல்களுக்காக நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி ரவுண்டானா அமைக்கலாம் என, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே பழங்காநத்தம், செல்லுார், ஆரப்பாளையம், பாத்திமா கல்லுாரி அருகே என பல இடங்களில் உள்ளது. இதேபோல மீதியுள்ள இடங்களிலும் ரவுண்டானா அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு தலைமை பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து அழகர்கோவில் ரோட்டில் பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, தாமரைத் தொட்டி சந்திப்பு, மூன்றுமாவடி, மேலமடை, திருநகரில் ஹார்விபட்டி, பழங்காநத்தம், காளவாசல், அரசரடி, பைபாஸ் ரோட்டில் ரயில்வே பாலத்தின் வடக்கு பகுதி உட்பட நகரின் பல்வேறு சந்திப்புகளை ஆய்வு செய்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து விரைவில் பணிகளை துவங்க உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X