திருமங்கலம்,-அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திருமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கல்பனா, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்த போதும் மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்தவில்லை. அந்த சுமையை மக்கள் மீது திணிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று 9 மாதங்களில் மீண்டும் மின்கட்டணம் உயரப் போகிறது என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதுவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இனிமேல் சொத்தை விற்றுத்தான் வரி கட்டும் சூழல் இருக்கிறது, என்றார்.