வாடிப்பட்டி--அலங்காநல்லுார் அருகே குமாரத்தில் இருந்து நகரி நான்கு வழிச்சாலைக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
இந்த மரங்கள் ரோட்டின் பார்வையை முழுவதுமாக மறைப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமங்களை சந்திக்கின்றனர். எதிரே வரும் கனரக வாகனங்களுக்கும், முந்தி செல்லும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும்போது சாலை வரை நீண்டுள்ள கருவேல முட்கள் வாகன ஓட்டிகளை காயப்படுத்துகின்றன. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
மதுரை--திண்டுக்கல் நான்கு வழிச் சாலையை இணைக்கும் இந்த 13 கி.,மீ., சாலையில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.