கடலுார், : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலுார் புதிய மீன்பிடி துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முகில்நிலவன் முன்னிலை வகித்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் வரவேற்றார்.
மீன்வளத்துறை கண்காணிப்பாளர் ராஜசிம்மன், ஆய்வாளர் அஞ்சனாதேவி, கடலுார் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் தினேஷ், முருகன் ஆகியோர் சாகர் மாலா திட்ட பணியாளர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.