புவனகிரி, : புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் துவங்கியது.
புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் மரக்கன்று நட்டார். பின்னர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
தாசில்தார் செல்வகுமார், சமூக பாதுகாத்திட்ட தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் ஆனந்தி, துணை தாசில்தார்கள் மணிகண்டன், கோவிந்தன், செல்வமணி, வருவாய் ஆய்வாளர்கள் சஞ்சய், அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 17ம் தேதி வரை முகாம் நடக்கிறது.