புவனகிரி : குச்சிபாளையம் கற்பக விநாயகர், பாலமுருகன் மற்றும் சப்த கன்னி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிதம்பரம் தாலுகா, கீரப்பாளையம் அடுத்த குச்சிபாளையத்தில் கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான பாலமுருகன் உள்ளிட்ட சப்த கன்னிகள் கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது.
நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை நடந்தது. 7:30 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜையும், அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி 10.05 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.