மதுரை-முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாநில அளவில் 5.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை நேற்று துவக்கினர்.
மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லுாரி நான்கு வழிச்சாலை அருகே நடந்த விழாவில் கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜன் தலைமையில், கோட்டப்பொறியாளர் சந்திரன் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டனர். உதவிக் கோட்ட பொறியாளர்கள் சோ.பாண்டியன், குட்டியான், உதவிப் பொறியாளர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.