கடலுார் : ஈரோடில் நடந்த மாநில சிட்டிங் வாலிபால் போட்டியில் கடலுார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அணி முதலிடம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டி நடந்தது. இதில், கடலுார் மாவட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து, கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பெற்றனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் கடலுாரில் கலெக்டர் அருண் தம்புராஜை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா, சிட்டிங் வாலிபால் கழக மாவட்டத் தலைவர் அசோகன் உடனிருந்தனர்.