வடலுார் : வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் அருகே கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம், 57; அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார்.
இவர், தனது உறவினர் சுந்தரமூர்த்தி, 45; என்பவருடன் மோட்டார் சைக்கிளில், விருத்தாசலம் சென்று ஒரு மூட்டை ஹான்ஸ் பாக்கெட் வாங்கி வந்தார்.
மளிகை கடையில் இறக்கி வைக்கும்போது ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ஜோதிராமலிங்கம், சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்து, 50 ஹான்ஸ் பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.