தேனி-தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நடைபயிற்சி திட்டம் குறித்துஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
மாவட்டத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள 8 கி.மீ.,துார நடைபாதைகளை கண்டறிதல், மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று நடைபயிற்சியை ஊக்குவித்தல். இது குறித்த விழிப்புணர்வுவை உள்ளாட்சி பிரதிநிதிகள். தன்னார்வலர்கள் மூலம் ஏற்படுத்துதல் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. சுகாதரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், ஊராட்சி உதவி இயக்குனர் அண்ணாத்துரை, ஆர்.டி.ஓ.,செல்வக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் பங்கேற்றனர்.