கடலுார், : கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு பாலாலய பூஜைகள் நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திப்பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபி ஷேகம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, ராஜகோபுரம், நடு கோபுரம், விமானம் மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதையொட்டி, கடந்த 5ம் தேதி பாலாலயம் பூஜைகள் துவங்கியது. கடந்த 6ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைகள், மாலை மூன்றாம் கால பூஜைகள் நடந்தது.
நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு மற்றும் பாலாலயம் நடந்தது.