கம்பம் -சுருளி அருவியில் விதிக்கப்பட்ட தடையை வனத்துறை விலக்கி கொண்டதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியது.
கேரளாவை கலக்கி வந்த அரிசி கொம்பன் யானை மே 5 முதல் மேகமலை பகுதியில் சுற்றித் திரிந்தது. மே 27 ல் சுருளி அருவி பகுதிக்கு வந்தது. எனவே, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மே. 28 முதல் தடை விதித்தது. அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பின் நேற்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.