போடி;போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகத்துடன் கூடிய கிராம சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறப்பு விழா காணப்படாமல் பூட்டியே உள்ளது. பகலில் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாகும் மாறியுள்ளது. கிராம ஊராட்சி சேவை மையத்திற்கான கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.