மூணாறு--மூணாறில் குப்பை நிரப்பிய சாக்கு மூடை ரோட்டில் வீசியவரை கண்டு பிடிக்க ஊராட்சி செயலர் சகஜன் நூதன முறையை கையாண்டார்.
மூணாறில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது. அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரில் சுப்பிரமணியசுவாமி ரோட்டில் தரம் பிரிக்காமல் குப்பைகள் நிறைந்த சாக்கு மூடை வீசப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊராட்சி செயலர் சகஜன் மூடையில் இருந்த குப்பைகளை ஆய்வு செய்த போது சேலை இருந்தது.
அதனை ரோட்டில் கட்டியவர் சேலைக்கு சொந்தக்காரர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டினார்.
குப்பையை கொட்டியவரை கண்டறிய செயலர் நுாதன முறையை கையாண்ட போதும் தகவல் அளிக்க யாரும் முன்வரவில்லை.