பெரியகுளம்,-பெரியகுளம் நகராட்சியில் முடங்கிய சோலார் பேனல் செயல்படுவதற்கு நகராட்சி கமிஷனர் கணேசன் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
பெரியகுளம் நகராட்சியில் அலுவலக மாடியில் சோலார் பேனல் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
சோலார் பேனலிலிருந்து மின் சப்ளை கொடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை மின் கட்டணம் குறைந்தது. பேட்டரி பழுதால் சோலார் பேனல் பயன்பாடு இன்றி ஓரங்கட்டப்பட்டது. கடந்த மார்ச்சில் நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார், சோலார் பேனல் செயல்படாத காரணம் குறித்தும், ரூ.1 லட்சம் மதிப்பில் பேட்டரி வாங்க அப்போதைய பொறியாளர் சத்தியமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
சோத்துப்பாறை அணை குடிநீர் திறப்பு பிரச்னையில் அப்போதைய கமிஷனர் புனிதன், நகராட்சி தலைவர் (திமு.க.,) சுமிதா இடையே பிரச்னை காரணமாக பேட்டரி வாங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி கமிஷனர் கணேசன் சோலார் பேனல் பராமரிக்க பேட்டரி வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.