கம்பம் காசி விஸ்வநாதர்  விசாலாட்சி  அம்மன் கோயிலில் பாலாலய பூஜை
கம்பம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோயிலில் பாலாலய பூஜை

கம்பம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோயிலில் பாலாலய பூஜை

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
கம்பம்,- -கம்பம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில்களில் திருப்பணி,கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நேற்று பாலாலயம் நடந்தது.இங்கு ஒரே வளாகத்தில் சிவன், பெருமாள் சன்னதிகள் இங்கிருப்பது தனிச்சிறப்பாகும். இக் கோயிலில் திருப்பணி, கும்பாபிஷேகம் 2003 ல் நடந்தது. கொரோனா பரவல் காலமாக இருந்ததால் கும்பாபிேஷகம் நடைபெறவில்லை. கோயிலில் திருப்பணி செய்ய எம்.எல்.ஏ.
 Balalaya Pooja at Kampam Kasi Vishwanath Visalakshi Amman Temple   கம்பம் காசி விஸ்வநாதர்  விசாலாட்சி  அம்மன் கோயிலில் பாலாலய பூஜை



கம்பம்,- -கம்பம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில்களில் திருப்பணி,கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நேற்று பாலாலயம் நடந்தது.

இங்கு ஒரே வளாகத்தில் சிவன், பெருமாள் சன்னதிகள் இங்கிருப்பது தனிச்சிறப்பாகும். இக் கோயிலில் திருப்பணி, கும்பாபிஷேகம் 2003 ல் நடந்தது. கொரோனா பரவல் காலமாக இருந்ததால் கும்பாபிேஷகம் நடைபெறவில்லை.

கோயிலில் திருப்பணி செய்ய எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியால் அனுமதி கிடைத்துள்ளது. திருப்பணி துவங்க இருப்பதை முன்னிட்டு நேற்று சஷ்டி மண்டபத்தில் விமானங்களுக்கு பாலாலயம்,சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

திருப்பணி கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை, சென்னை பி.எல்.பி. நிறுவனங்கள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பி.எல்.பி. நிறுவனங்களின் சேர்மன் பாஸ்கர் கூறுகையில், மூலவர், அம்மன் சன்னதிகளுக்கு வர்ணம் பூசுவது, மராமத்து பணிகள், விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பைரவர், நவக்கிரக சன்னதிகளுக்கு மராமத்து,வர்ணம் பூசுதல். கிழக்கு, மேற்கு சால கோபுரங்கள் மராமத்து, வர்ணம் பூசுதல், சிவன், அம்மன் சன்னதி உட்புற மண்டப வேலைகள், முருகன் சன்னதி, சஷ்டி மண்டபம் மேல்தளம் தட்டோடு பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், கொடிமரம் செப்புத் தகடு மெருகேற்றுதல், கல்காரம் வர்ண வேலைகள் உள்ளிட்ட திருப்பணிகளை ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் பி.எல்.பி. நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்.ஏ. ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் வனிதா, ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி பாஸ்கர், விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தி .மு.க. நகர் செயலாளர்கள் வீரபாண்டியன், செல்வக்குமார், மாணவரணி பால்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X