தேனி,- -திருப்பூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆண்டிபட்டி குமணன்தொழுவில் விற்பனை செய்த அப்பகுதியை சேர்ந்த குபேந்திரனை 40, போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி தலைமையிலான போலீசார் குமணன்தொழுவில் ரோந்து சென்றனர்.
அப்போது கைதான குபேந்திரன் வீட்டில் ரூ.12,500 மதிப்புள்ள ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் குமணன் தொழுவை சேர்ந்த குமார் மூலம் திருப்பூரில் உள்ள கதிரேசனிடம் கஞ்சாவை வாங்கி, அதனை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தார்.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குபேந்திரன், குமார், கதிரேசன் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிந்து, குபேந்திரனை கைது செய்தனர்.