தேனி, -தேனி அருகே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பந்து வீச்சு வலை பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி திறந்து, பந்து வீசி துவக்கி வைத்தார்.
தேனி அருகே தப்புக்குண்டுவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானம் உள்ளது. இங்கு மாவட்ட, மாநிலங்களுக்கிடையேயான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு கூஜ் பெஹார் போட்டி இங்கு நடந்தது. இம் மைதானத்தில் புதிதாக பந்து வீச்சு வலை பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் வருண்சக்கரவர்த்தி நேற்று காலை திறந்து வைத்து பந்து வீசி துவக்கி வைத்தார்.
இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பேட்டிங் செய்தனர். மாநில கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் டாக்டர் பாபா, இயக்குனர் பிரகாஷ், அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர் லட்சுமண்நாராயன், மாவட்ட நிர்வாக அலுவலர் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பேசுகையில், தேனி மாவட்டத்தில் உலகத்தரத்திலான பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தென்தமிழகத்தில் சிறந்து பந்து வீச்சாளர்கள் உருவாகுவர். வீரர்கள் தினமும் 3முதல் 4 மணிநேரம் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்றார். மாநிலம் முழுவதும் நடந்த சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வில் தேர்வு செய்ப்பட்ட 31 வீரர்களுக்கு இங்கு 21 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. என்றனர்.