புவனகிரி : புவனகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பா.ஜ., பிரமுகர் அறிவித்திருந்த உண்ணாவிரதம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
புவனகிரி வெள்ளாற் றில் தடுப்பணை கட்ட வேண்டும். அதற்கான அரசாணை வெளியிட்டு விரைந்து பணிகளை துவக்க வேண்டும், தனியார் மற்றும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
சிதம்பரத்தில் இருந்து சி.முட்லுார் வழியாக புவனகிரிக்கு பஸ் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பா.ஜ., மூத்த உறுப்பினர் கனகராஜன் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்தார்.
இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புவனகிரி தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதையடுத்து, உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.