மூணாறு,- -மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் புண்ணியவேலின் மளிகை கடையை படையப்பா எனும் காட்டு யானை சேதப்படுத்தியது.
மூணாறு பகுதியில் கம்பீரமாக வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காணவில்லை.
அதனை வனத்துறை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு சொக்கநாடு எஸ்டேட் சவுத் டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு புண்ணியவேலின் மளிகை கடையின் கதவை சேதப்படுத்தியது.
அப்பகுதி மக்கள், காட்டு யானை தடுப்பு குழுவின் உதவியுடன் படையப்பாவை விரட்டயதால் பொருட்கள் தப்பின.
18வது முறை: ஏற்கனவே இந்த கடையை கடந்த பத்து ஆண்டுகளில் காட்டு யானைகள் 17 முறை சேதப்படுத்தின. இறுதியாக பிப்.15ல் ஐந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை சேதப்படுத்தியது.
தற்போது கடையை படையப்பா முதன்முறையாக சேதப்படுத்தியது குறிப்பிடதக்கது.