தேனி- -முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தேனி நேருசிலை அருகே அவரது உருவப்படத்திற்கு தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.
பின் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவைத் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.
நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், பொருளாளர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அமைப்பாளர் ராஜசேகரன், ஹிந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்முருகன், முன்னாள் நகரச் செயலாளர் பாலமுருகன், கவுன்சிலர் சதீஷ், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பரணீஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் முனியம்மாள், முனியாண்டி நிர்வாகிகள் ஜீவா, பண்ணை ரவி, பவுனு, செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.