தேவிபட்டினம்--முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி லோக்சபா எம்.பி., ரவீந்திரநாத் நேற்று தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஓ.பி.எஸ்., ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்தியலிங்கம் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தஞ்சை சென்று வந்த ரவீந்திரநாத் எம்.பி., ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் நவபாஷாண நவக்கிரக கோயிலில் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.
தொடர்ந்து நவக்கிரகங்களின் வழிபாடு முறைகள் குறித்தும், நவபாஷாணத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் சிவாச்சாரியார்களிடம் கேட்டறிந்தார்.
வழிபாட்டின் போது ராஜ்ய சபா எம்.பி., தர்மர் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். பின், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார்.