போடி,- -போடி அருகே பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது திம்மநாயக்கன்பட்டி. 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் அவர்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொடி கம்பத்தை அகற்ற கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போடி தாலுகா போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொடி கம்பத்தை அகற்றிய பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 10 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.