திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடு திருப்பங்களில் செல்லும் போது எதிரெதிரே வாகனங்கள் வருவதை கண்டறியும் வகையில் குவி லென்ஸ் வைக்கப்படுவதுண்டு. ஆனால் தற்போது இவைகள் பராமரிக்காமல் கண்ணாடிகள் உடைந்தும், இருப்பவை திசை மாறி இருப்பதுமாக உள்ளது. சில திருப்பங்களில் இவைகள் இருப்பதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தினை சந்திக்கும் நிலை தொடர்கிறது. நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறையினர் பராமரிப்பதோடு, இல்லாத இடத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.