திண்டுக்கல்-ஓடிசாவில் சில தினங்களுக்கு முன் ரயில் விபத்தில் 288 பேர் பலியான சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ரயில்வே பாதைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷன் வரை ரயில் பாதை ,சிக்னல்கள் முறையாக இயங்குகிறதா என சோதனை நடந்தது. இன்ஸ்பெக்டர் துாய மணி வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement