திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட இந்தியன் பாரம்பரிய வில்வித்தை தேசிய பயிற்சி முதலாமாண்டு முகாம் ஜி.டி. என். கலை கல்லுாரியில் முதல்வர் பாலகுருசாமி தலைமையில் நடந்தது.
உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், உதவி இயக்குநர் பங்காருசாமி, பாரம்பரிய வில்வித்தை சங்க பொது செயலாளர் மதன்குமார் மாணவர்களை வாழ்த்தினர்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அக்டோபர் 1முதல் 8வரை இந்தோனேஷியாவில் நடக்கும் உலக பாரம்பரிய வில்வத்தை கூட்டமைப்பு போட்டிக்கு தேர்வு செய்ய பட்டுள்ளனர்.