''பத்திரப்பதிவு துறையில, கோவை, திருப்பூர் மாவட்டம் மட்டும் தனி தினுசால்லா இருக்கு...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட பத்திரப்பதிவு துறையில இணை பதிவாளர்கள், சார் - பதிவாளர்களை அடிக்கடி இடமாற்றம் செய்தாவ... அதுவும், கூடுதலா வேறு இடங்களையும் பார்க்க சொல்லி உத்தரவுபோடுதாவ வே...
''இதெல்லாம்மேலதிகாரி ஒருத்தரின் திருவிளையாடலாம்... 'கவனிப்பு' கரெக்டா இருந்தா, கேட்கிற இடத்தை,பட்டுன்னு துாக்கிகுடுத்துடுவாரு வே...
''துறை பெரும் புள்ளிக்கும் வேண்டியதை செஞ்சு குடுத்துடுதாரு.... அதனால, மேலிடமும் இவரை கண்டுக்கிறது இல்ல... இதனால, இஷ்டம் போல இடமாறுதல் போட்டு, பணமழையில குளிக்காரு வே...'' என்ற அண்ணாச்சி, ''அடடே, சாமிநாதன் தம்பியா... வாரும், ஊருல இருந்து எப்ப வந்தீரு...'' என, நண்பரிடம் பேச்சு கொடுக்க, பெரியவர்கள் புறப்பட்டனர்.