கோயில் சொத்துக்களை விற்றால் போராட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை
கோயில் சொத்துக்களை விற்றால் போராட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

கோயில் சொத்துக்களை விற்றால் போராட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
மதுரை: 'ஹிந்து கோயில் சொத்துக்களை விற்றால் மிகப் பெரிய போராட்டம் நடக்கும்' என் பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்தபின் அவர் கூறியதாவது: கோயில் நிலங்களை எந்த பொது காரியத்திற்கும் விற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எதிரே
Protest against sale of temple property: H. Raja warns    கோயில் சொத்துக்களை விற்றால் போராட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: 'ஹிந்து கோயில் சொத்துக்களை விற்றால் மிகப் பெரிய போராட்டம் நடக்கும்' என் பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.


மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்தபின் அவர் கூறியதாவது: கோயில் நிலங்களை எந்த பொது காரியத்திற்கும் விற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எதிரே இடத்தை வாகன நிறுத்தத்திற்கு ஒத்திக்கு விடவேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அறநிலையத்துறை அந்த இடத்தை நீதிமன்றத்திற்கே விற்கிறோம் என்று உள்நோக்கத்துடன் சொல்கின்றனர்.


இன்று உயர் நீதிமன்றத்திற்கு கோயில் நிலத்தை விற்றால், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் கொடுத்து விடலாம் என்பதே அவர்கள் எண்ணம். அறநிலையத்துறைக்கு கோயில் நிலத்தை விற்க எந்த உரிமையும் இல்லை. மீறி விற்கப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.


latest tamil news

ஒடிசா ரயில் விபத்துக்காக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் 22 பேர் விஷச் சாராயம் குடித்து இறந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்காத திருமாவளவன், இந்த விவகாரத்தில் வாய் திறக்கக் கூடாது.


சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு தொழில் செய்ய வர விரும்புகின்றன. அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


முதல்வர் வீணாக நேரில் சென்று அழைக்க வேண்டாம் என்று கவர்னர் சொல்கிறார். அதற்கு முதல்வர் கூட ஒன்றும் சொல்லவில்லை. அதனால் வைகோ போன்றவர்கள் எல்லாம் வாயை மூடி இருப்பது நல்லது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

vijay - chennai,இந்தியா
09-ஜூன்-202310:34:56 IST Report Abuse
vijay கோவில் சிலைகலையே களவாடினா ...
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
08-ஜூன்-202316:51:46 IST Report Abuse
muthu Instead of sale why not rent the land on yearly basis to high court use .
Rate this:
Cancel
Mani - Melattur,இந்தியா
08-ஜூன்-202316:49:53 IST Report Abuse
Mani கட்சி பணத்தை 4 கோடி கோடி திருடி வீடு கட்டியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X